Advertisement
Advertisement
Advertisement

எனது நாட்டிற்காக சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி - சர்ஃப்ராஸ் கான்!

என்னுடைய சிறுவயது கனவை நிறைவேற்றியதுடன், எனது நாட்டிற்காக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார்.

Advertisement
எனது நாட்டிற்காக சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி - சர்ஃப்ராஸ் கான்!
எனது நாட்டிற்காக சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி - சர்ஃப்ராஸ் கான்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 19, 2024 • 09:35 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

Bharathi Kannan
By Bharathi Kannan
October 19, 2024 • 09:35 PM

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே, டிம் சௌதீ ஆகியோரது அரைசதத்தின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களையும், டெவான் கான்வே 91 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Trending

அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ரிஷப் பந்த் 99 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்திருந்தனர்.

இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தது குறித்து பேசிய சர்ஃப்ராஸ் கான், “என்னுடைய சிறுவயது கனவை நிறைவேற்றியதுடன், எனது நாட்டிற்காக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரிஷப் பந்துடன் இணைந்து பேட்டிங் செய்வது சுவாரஸ்யமான ஒன்றாகும். அவர் களத்தில் இருக்கும் போது ரன்கள் விரைவராக வரும். மேலும் நாங்கள் இருவரு ஒருவரை ஒருவர் நீண்ட காலம் அறிந்திருப்பதால், எங்களிடியே நல்ல தொடர்பு இருக்கிறது.

Also Read: Funding To Save Test Cricket

ரிஷப் பந்து காயமடைந்திருப்பது எங்களுக்குத் தெரியும், எனவே களத்தில் ஓடுவதில் கவனமாக இருக்க ஒப்புக்கொண்டோம். நான் இடைநடுவில் அவரது நிலைமையை நினைவு கூர்ந்தேன் மற்றும் உள்ளுணர்வாக பதிலளித்தேன். அவர் அந்த நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் இருந்ததற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல் வேண்டும். மேலும் நான் ஸ்கோர் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியதால், மற்ற எதுவும் குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை” என தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement