
WI vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து வரும் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 48 ரனக்ளையும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 44 ரன்களையும், பிராண்டன் கிங் 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.