1st Test, Day 2: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; அதிரடி காட்டும் அயர்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது.
![1st Test, Day 2: Ireland close out day two looking to build on their lead! 1st Test, Day 2: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; அதிரடி காட்டும் அயர்லாந்து!](https://img.cricketnmore.com/uploads/2025/02/1st-Test,-Day-2-Ireland-close-out-day-two-looking-to-build-on-their-lead!-mdl.jpg)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 06) புலவாயோவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் மற்றும் மார்க் அதிர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 7ஆவது விக்கெட்டிற்கு 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களைச் சேத்திருந்த மார்க் அதிர் தனது விக்கெட்டை இழந்தார்.
Trending
பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்டி மெக்பிரைன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க விரர் பென் கரண் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கைடானோ 26 ரன்களுடனும், நிக் வெல்ச் 33 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் கைடானோ 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிரைன் பென்னட் 7 ரன்களுக்கும், வெஸ்லி மதவரே 26 ரன்களுக்கும், கேப்டன் ஜானதன் காம்பெல் 4 ரன்களிலும், மயவோ 18 ரன்களிலும், நியூமன், ந்ங்கரவா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக் வெல்ச் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பிளெஸிங் முசரபானி - ட்ரேவர் குவாண்டு இணை சிறப்பாக செயல்பட்டதுடன் கடைசி விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியியை முன்னிலைக்கு கொண்டு சென்றனர். இதில் அரைசதத்தை நெருங்கிய முசரபானி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி 4 விக்கெட்டுகளையும், ஆண்டி மெக்பிரைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் 7 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணிக்கு பீட்டர் மூர் - கேப்டன் ஆண்ட்ரூ மெக்பிரைன் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் பீட்டர் மூர் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் மெக்பிரைனுடன் இணைந்த கர்டிஸ் காம்பெரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அயர்லாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆண்ட்ரூ மெக்பிரைன் 32 ரன்களுடனும், கர்டிஸ் காம்பேர் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now