
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் மற்றும் மார்க் அதிர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். இதில் மார்க் அதிர் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களையும், ஆண்டி மெக்பிரைன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜிம்பாப்வே தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கைடானோ - டாம் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 12 ரன்களைச் சேர்த்த நிலையில் பென் கரண் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து கைடானோ,பிரைன் பென்னட், வெஸ்லி மதவரே, கேப்டன் ஜானதன் காம்பெல் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தானர். அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக் வெல்ச் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.