
ENG vs IND, 1st Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்த இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 149 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போடியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 364 ரான்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலக்கை நோக்கி விலையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் தனது சதத்தையும், ஸாக் கிரௌலி தனது அரைசதத்தையும் பதிவுசெய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 188 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். பின் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலி விக்கெட்டை இழந்தார்.