1st Test, Day 5: சதத்தை நோக்கி விளையாடும் நஜ்முல்; மழையால் தடைபட்ட ஆட்டம்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமானது மழை காரணமாக தடைபட்டுள்ளது.

SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 54 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 87 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 485 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் நயீன் ஹசன் 5 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 10 ரன்கள் முன்னிலையுடன் இராண்டவாது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் அனமூல் ஹக் 4 ரன்களிலும், மொமினுல் ஹக் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஷாத்மான் இஸ்லாம் அரைசதம் கடந்ததுடன் 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தர். பின்னர் நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் காரணமாக வங்கதேச அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது.
Also Read: LIVE Cricket Score
இந்நிலையில் இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தை நஹ்முல் ஹொசைன் சாண்டோ 56 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 22 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அரைசதத்தை நெருங்கிய முஷ்ஃபிகூர் ரஹிம் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் மழை பெய்த காரணத்தால் கடைசி நாளின் உணவு இடைவேளையானது முன்கூட்டியே எடுக்கப்பட்டது. அந்தவகையில் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 89 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now