சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்; பாராட்டித்தள்ளிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் தனித்துவமான வீரர் என சக வீரர் ஜோ ரூட் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னினஙஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இராண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கும் பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி 31 ரன்களில் ஆடமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
Trending
அதன்பின் அதிரடி காட்டிய பென் டக்கெட் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து வந்த ஜோ ரூட்டும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் , ஜஸ்ப்ரித் பும்ராவின் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய ஒல்லி போப் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
இதில் அபாரமாக விளையாடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தியதுடன் ஆட்டமிழக்காமல் 148 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஒல்லி போப்பை சக வீரர் ஜோ ரூட் பாராட்டி பேசியுள்ளார்.
போப் குறித்து பேசிய ரூட், “இந்த விக்கெட்டில் எங்களால் பந்தை சரியாக கணிக்க முடியாமல் தடுமாறினோம். ஏனெனில் பந்து திடீரென ரிவர்ஸ் ஸ்விங்கானது. ஆனால் எங்கள் அணி வீரர் ஒல்லி போப் இந்த மாதிரியான கடினமான விக்கெட்டிலும் சிறப்பாக செய்லபட்டதுடன், பார்டர்ஷிப்பையும் அமைத்து அசத்தியுள்ளார். அவரது இந்த இன்னிங்ஸ் ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆகும்.
ஒருவீரர் காயத்திலிருந்து மீண்டு இப்போட்டி ஒரு இன்னிங்ஸை விளையாடுவது என்பது மிகப்பெரிய விசயம். அவரை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமைக்கொள்கிறோம். அவர் எப்படிபட்ட வீரர் என்பதனை நாங்கள் அறிவோம். நாங்கள் இப்போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுக்க அவரது இந்த இன்னிங்ஸ் மிகப்பெரும் உத்வேகத்தை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now