
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில இளம் வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் சமீப காலமாக சொந்த மாநில வீரார்களை தேர்வுசெய்வதில் அதிக ஆர்வம் காட்ட தவறிவருகின்றன. ஏனெனில் ஒன்று அல்லது இரண்டு உள்ளூர் வீரர்கள் இருப்பது பொதுவாக ஐபிஎல் அணிகளுக்கு உதவும். அவர்களில் உள்நாட்டு நிலைமைகள் பற்றிய அறிவு எப்போதும் நன்மை பயக்கும். மேலும், உள்ளூர் ரசிகர்களும் தங்களின் சொந்த அணி வீரர் விளையாடுவதை பார்ப்பதற்கும் அதிக ஆர்வம் காட்டுவர். ஆனால் சில அணிகள் அதனை செய்ய தவறி வருகின்றனர்.