4,6,4,4,6: ஹர்ஷல் படேல் ஓவரை பிரித்து மேய்ந்த அபிஷேக் போரல் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் போரல் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ர பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில்பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் 20 ரன்களில் மிட்செல் மார்ஷும், 29 ரன்களில் டேவிட் வார்னரும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப்பும் 33 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்களுக்கும், ரிக்கி பூஸ் 3 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேலும் தனது பங்கிற்கு 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Trending
இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 138 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் போரல் களமிறங்கினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிஷேக் போரல் 10 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சகள் என 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது.
— IndianPremierLeague (@IPL) March 23, 2024
Abhishek Porel delivered and provided the late flourish for @DelhiCapitals
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia#TATAIPL | #PBKSvDC pic.twitter.com/8awvqO712N
இந்நிலையில் இப்போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் போரல் கடைசி ஓவரில் 25 ரன்களைச் சேர்த்து மிரளவைத்தார். அதன்படி பஞ்சாப் அணி தரப்பில் கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீச, அதனை எதிர்கொண்ட அபிஷேக் போரல் முதல் பந்தை பவுண்டரிக்கும், இரண்டாவது பந்தை சிக்சருக்கும் விளாச, அடுத்தடுதடுத்த பந்துகளில் பவுண்டரியும், 5ஆவது பந்தில் மீண்டும் ஒரு சிக்சரை பறவிட்டு மிரளவைத்தார். இந்நிலையில் அபிஷேக் போரல் அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now