
அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெர்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் சதமடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 73 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதற்கு அடுத்த பாந்திலேயே 67 ரன்களைச் சேர்த்திருந்த பிரதிகா ராவலும் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணையும் அபாரமாக விளையாடி அணியின் ரன் வேகத்தை சரியவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் 89 ரன்களைச் சேர்த்திருந்த ஹர்லீன் தியோல் ஆட்டமிழக்க, மறுபக்கம் அபாரமாக விளையாடியா ஜெமிமா ரோட்ரிக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.