திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சி -சூர்யகுமார் யாதவ் !
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போன்ற ஒருவர் பொறுப்பேற்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 45 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 31 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 12 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 5 ரன்னிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும், துருவ் ஜுரெல் 4 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது.
Trending
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். மேற்கொண்டு 6ஆவது விக்கெட்டுக்கு திலக் வர்மா-வாஷிங்டன் சுந்தர் ஜோடி 38 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த அக்ஸர் படேல், மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, ஆட்டமும் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் இந்திய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.மேற்கொண்டு இப்போட்டியின் ஆட்டநாயகனாக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. இப்போட்டியில் 160 ரன்கள் என்ற இலக்கை துரத்துவது எளிதாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் அவர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை அழுத்ததில் ஆழ்த்தினர். இருப்பினும் நாங்கள் இப்போட்டியில் தோல்வியைத் தவிர்த்திருப்பது நல்லது.
கடந்த 2-3 தொடரிலிருந்து நாங்கள் கூடுதல் பேட்டருடன் விளையாடி வருகிறோம். எங்களுக்கு அந்த தெவை உள்ளது. மேலும் அந்த பேட்டரால் எங்களுக்கு 2-3 ஓவர்கள் பந்துவீசவும் முடியும் என்பதால் அதனை நாங்கள் பின் பற்றி வருகிறோம். நாங்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுகிறோம், ஆனால் அதே நேரத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப, இளம் வீரர்கள் உண்மையில் தங்கள் கைகளை உயர்த்தி அந்த சிறிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்கினர்.
இப்போட்டியில் அக்ஸர் படேல் விக்கெட்டை இழந்ததும் நாங்கள் இப்போட்டியை இழந்துவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால் இவை அனைத்தும் விளையாட்டின் ஒரு பகுதி. திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போன்ற ஒருவர் பொறுப்பேற்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் ரவி பிஷ்னோயும் பேட்டிங்கில் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க விரும்புகிறார். இன்று அதை செய்தும் காட்டினார்.
இந்த வெற்றியின் அர்ஷ்தீப் சிங்கையும் நாம் மறந்துவிட கூடாது. அவருடைய அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது, வீரர்கள் எனக்கு நிறைய அழுத்தத்தை அளித்துள்ளனர், அதனால் நான் வெளியே சென்று என்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட வகை கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம், அதனால் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருந்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now