-mdl.jpg)
இந்தியா - இங்கிலாது அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 209 ரன்களைச் சேர்த்தார். இதில் 19 பவுண்டரி, 7 சிக்சர்களும் அடங்கும்.
இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பாந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கட் - ஸாக் கிரௌலி இணை வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் முதல் 10 ஓவர்களிலேயே அந்த அணி 59 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் 21 ரன்களில் பென் டக்கெட் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் விளாசிய ஸாக் கிரௌலி 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 5 ரன்களுக்கும், ஒல்லி போப் 23 ரன்களுக்கும், ஜானி பேர்ஸ்டோவ் 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.