
2nd Test, Day 1: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; கருண் நாயர் ஏமாற்றம்! (Image Source: Google)
Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த இந்திய வீரர் கருண் நாயர் 31 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 02) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.