
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழ்ந்த நிலையில் தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்று தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், நிலைத்து நின்று ஆடிய மோமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்தார். இதில், ஒரு சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். பந்து வீச்சில் உனட்கட் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்திய அணியில் கே ராகுல் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்க முதலே தடுமாறிய கே எல் ராகுல் இரண்டு முறை விக்கெட் கண்டத்திலிருந்து தப்பினார். முதல் நாள் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் சீக்கிரமாகவே முடிந்தது. இந்திய அணி முதல் நாள் முடிவில் 19 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ராகுல் 3 ரன்களும், சுப்மன் கில் 14 ரன்களும் எடுத்திருந்தனர்.