
SL vs BAN, 2nd Test: கொழும்புவில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்ததுடன் 158 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தர்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 46 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம், 35 ரன்களையும், லிட்டன் தாஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் லஹிரு உதாரா சிறப்பான தொடக்கத்தை வழங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 40 ரன்கள் எடுதிருந்த லஹிரு உதாரா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தினேஷ் சண்டிமால் சிறப்பான ஆட்டத்தாஇ வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தானது 5அவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.