
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்தச் சூழலில் நேற்று தாக்காவில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இருந்தும் அந்த அணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. மொமினுல் ஹக், சிறப்பாக பேட் செய்து 157 பந்துகளை எதிர்கொண்ட அவர் 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி இருந்தார்.
அதன்பின் லிட்டன் தாஸ், ரஹீம் போன்ற வீரர்கள் கொஞ்ச நேரம் களத்தில் விளையாடி இருந்தனர். ஆனாலும் அவர்களால் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். உனத்கட், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சிராஜ் மற்றும் அக்சர் படேல் முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தவில்லை.