2nd Test, Day 3: பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்; ஆஸ்திரேலிய 414 ரன்களில் ஆல் அவுட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 414 ரன்களில் ஆல் அவுட்டானது.
![2nd Test, Day 3: Australia’s strong first-innings lead leaves Sri Lanka with plenty to do! 2nd Test, Day 3: பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்; ஆஸ்திரேலிய 414 ரன்களில் ஆல் அவுட்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/Prabhat-vs-NZ-lg-mdl.jpg)
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமால் 74 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 85 ரன்களைச் சேர்த்தார். மேற்கொண்டு மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் தலா 3 விக்கெடுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
Trending
இதில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும், அடுத்து வந்த மார்னஸ் லபுஷாக்னே 4 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த அலெக்ஸ் கேரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடி வந்த அலெக்ஸ் கேரியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் 120 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 131 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த அலெக்ஸ் கேரியும் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 156 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் களமிறங்கிய வீரர்களில் பியூ வெப்ஸ்டர் 31 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 414 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளையும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now