BAN vs IND, 2nd Test: குல்தீப் யாதவை நீக்கியது குறித்து கேஎல் ராகுல் விளக்கம்!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவை ஆடவைக்காதது ஏன் என்று இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ் 2வது டெஸ்ட்டில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார்.
முதல் டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்ற குல்தீப் யாதவை 2வது டெஸ்ட்டில் பென்ச்சில் உட்காரவைத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
Trending
ஆனால் 2ஆவது டெஸ்ட்டில் குல்தீப் ஆடாதது பாதிப்பாக அமையாமல், இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது. 2வது டெஸ்ட் வெற்றிக்கு பின் குல்தீப்பை நீக்கியது குறித்து பேசிய கேஎல் ராகுல், “குல்தீப் யாதவை எடுக்காததற்கு நான் வருந்தவில்லை. அது சரியான முடிவுதான். இந்த பிட்ச் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கும் சாதகமான பிட்ச்சாக இருந்தது. பவுன்ஸ் நிலையற்றதாக இருந்தது.
ஸ்பின் மற்றும் பவுன்ஸ் ஆகிய இரண்டுக்கும் சாதகமான பிட்ச்சாக இருந்தது. 2வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாளே பிட்ச்சை பற்றி தெரிந்துகொண்டோம். எனவே தான் பேலன்ஸான அணியை தேர்வு செய்யும் விதமாக குல்தீப்பை உட்காரவைத்தோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now