ENG vs IND, 2nd Test: தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இப்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டதால், போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
Trending
இந்நிலநில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பும்ரா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். அதே போல் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் உள்ளனர்.
பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் இப்போட்டியில் கேப்டன் விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும், ரகானே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அவர்கள் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதே போல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் ரன்களை சேர்க்க வேண்டும். முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட உத்வேகத்துடன் இந்தியா களம் இறங்கும்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஜோரூட் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் முதல் டெஸ்டில் சதம் அடித்தார். முதல் இன்னிங்னிசில் 64 ரன்னும் 2ஆவது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார்.
மற்ற வீரர்களில் பேர்ஸ்டோவ், சாம் கரன் சிறிது தாக்கு பிடித்து விளையாடினார்கள். அதனால் இப்போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்கள் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இருப்பினும் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன், ராபின்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், பயிற்சியின் போது காயம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் நாளைய டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்.
இதற்கிடையே 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் மொய்ன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று முன்னிலை பெற இரு அணிகளும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now