இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி - டீன் எல்கர்!
இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து மிகச் சிறப்பாக பந்து வீசினர் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டின் எல்கர் பாராட்டியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்கள் ஆட்டமிழக்க இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 153 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டம் இழக்க 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை இந்தியா சமன் செய்தது.
Trending
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர், “இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி. இந்த போட்டியில் நாங்கள் ஒரு நல்ல பாசிட்டிவ்வான எண்ணத்துடன் தான் களமிறங்கினோம். ஆனாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து மிகச் சிறப்பாக பந்து வீசினர்.
இரண்டு அணிகளிலும் இளம்வீரர்கள் இருந்ததால் மிகச் சிறப்பாக இந்த போட்டி சென்றது. இந்த தொடரை நாங்கள் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. இந்திய வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர்.
அதோடு மார்க்ரம் இந்த மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸ்சில் சதம் அடித்தது மிகச் சிறப்பான ஒரு ஆட்டம் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகவே எங்களது அணி சிறப்பாக செயல்பட்டது. இதுபோன்ற போட்டிகளில் இருந்து நாம் நிறைய விடயங்களையும், அனுபவங்களையும் கற்றுக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now