IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய இந்திய அணியானது, டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
Trending
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை மறுநாள் (அக்.12) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தும். அதேசமயம் கடைசி டி20 போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் வங்கதேச அணி விளையாடவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதன்படி இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் திலக் வர்மா, ஹர்ஷித் ரானா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை பிளேயிங் லெவனில் இந்த மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் ரியான் பராக், வருண் சக்ரவர்த்தி மற்றும் மயங்க் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேறு பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ வாய்ப்பில்லை. இதில் திலக் வர்மா, ரவி பிஷ்னோய் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவத்தை பெற்றுள்லனர். அதேசமயம் ஹர்ஷித் ரானா இதுவரை இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணி: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதீஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், ஜிதேஷ் சர்மா, திலக் வர்மா, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா.
Win Big, Make Your Cricket Tales Now