ஐபிஎல் 2025: தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
எதிவரும் வீரர்கள் ஏலத்தில் தீபக் சஹாருக்கு மாற்றாக சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பட்டியலில் பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என்றும் பிசிசிஐ கெடு விதித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அந்த அணி அன்கேப்ட் வீரராக தேர்வு செய்துள்ளது. மேற்கொண்டு அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளது
Trending
மேலும் மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த தக்கவைப்பு பட்டியலில் அந்த அணி தீபக் சஹாரின் பெயர் இடம்பெறவில்லை. சென்னை அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த அவர், கடந்த சீசனில் காயன் காரணமாக விளையாடததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடிக்கடி காயமடைந்து தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறும் தீபக் சஹாருக்காக மீண்டும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டுவதும் சந்தேகம் தான என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எதிவரும் வீரர்கள் ஏலத்தில் தீபக் சஹாருக்கு மாற்றாக சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பட்டியலில் பார்ப்போம்.
1. முகமது ஷமி
இந்திய அணியின் அனுபவமிக்க வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். காயம் காரணமாக கடந்த சீசனை தவறவிட்ட ஷமி, தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருவதுடன் வீரர்கள் ஏலத்திலும் பங்கேற்க உள்லார். ஒருவேளை ஏலத்தில் ஷமியை சிஎஸ்கே நிர்வாகம் வாங்கும் பட்சத்தில், அணியின் வேகப்பந்து வீச்சு துறையை அவர் வழிநடத்துவார். மேலும் பதிரனாவும் அணியில் இருப்பதன் காரணமாக நிச்சயமாக அது எதிரணிக்கு பெரும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சிஎஸ்கே நிர்வாகம் நிச்சயம் ஷமியை ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டும். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை முகமது ஷமி இதுவரை விளையாடிய 110 போட்டிகளில், 8.44 என்ற எகானமி ரேட் உதவியுடன் 127 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. முகமது சிராஜ்
இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடிப்பவர் முகமது சிராஜ். ஆனால் அவரை ஏலத்தில் எடுப்பதில் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு சில பிரச்சனைகள் உள்ளன. ஏனெனில் அவர் முன்பு விளையாடிய ஆர்சிபி அணியானது மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்து, சிராஜை அணியில் இருந்து விடுத்திருந்தது. இருவரும் அவர்கள் ஏலத்தின் போது சிராஜை ஆர்டிஎம் முறையில் தேர்வுசெய்ய முடியும் என்பதால் அது சிஎஸ்கேவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடலாம். சிராஜ் குறித்து பேசியனால், புதிய பந்தில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரால் டெத் ஓவர்கள் உட்பட மற்ற கட்டங்களிலும் பந்து வீச முடியும். எனவே, சிராஜுக்காக சிஎஸ்கே கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சிராஜ் இதுவரை ஐபிஎல்லில் 93 போட்டிகளில் விளையாடி 8.65 என்ற எகானமி ரேட்டின் உதவியுடன் 93 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
3. முகேஷ் குமார்
Also Read: Funding To Save Test Cricket
சிஎஸ்கே அணி தேர்வுசெய்ய வாய்ப்புள்ள வீரர்களில் மூன்றாம் இடத்தை பிடிப்பவர் முகேஷ் குமார். இந்திய அணியின் டி20 மற்றும் டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்டு வரும் அவரை, எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்ய ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸில் சிறப்பாக செயல்பட்ட அவரால் பல்வேறு கட்டங்களிலும் அணிக்கு பங்களிக்க முடியும். மேலும் அவரால் புதிய பந்திலும் எதிரணி பேட்டர்களை தடுமாற செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் முகேஷ் குமார் 20 போட்டிகளில் விளையாடி 10.44 என்ற எகானமியில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்து. இதுதவிர்த்து புவனேஷ்வர் குமார், நடராஜன் உள்ளிட்டோரையும் சிஎஸ்கே அணி வாங்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now