ஐபிஎல் 2025: மார்க்ரம் விளையாடுவது சந்தேகம்; பின்னடைவை சந்திக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ஐடன் மார்க்ரம் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகிவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாப் 2 இடத்தை உறுதிசெய்துள்ள நிலையில், ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ளதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மார்க்ரம் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி இன்றைய போட்டியில் ஐடன் மார்க்ரம் லெவனில் இடம்பெறாத பட்சத்தில் மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ பிரிட்ஸ்கீக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை 112 டி20 போட்டிகளில் விளையாடி 2783 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தென் ஆப்பிரிக்கா அணிக்காக 10 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதில் 1 அரை சதத்துடன் 151 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை மேத்யூ பிரிட்ஸ்கிக்கும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அர்ஷின் குல்கர்னி லெவனில் இடம்பிடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிக்கு உதவ முடியும் என்பதால் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் இதுவரை 14 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளதால் வாய்ப்பி கிடைக்குமா என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கி
Win Big, Make Your Cricket Tales Now