
சிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெற இருக்கும் 11ஆவது லீக் போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தீபக் ஹூடா மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல் 2025ல் சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அதில் 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் தீபக் ஹூடாவிற்கு பதிவிலாக லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.