ஐபிஎல் 2025: தேவ்தத் படிக்கல்லிற்கு பதிலாக இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள தேவ்தத் படிக்கல்லிற்கு பதிலாக ஆர்சிபி அணியின் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இப்போட்டியில் வெற்றிபெறுவது இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிவுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
மயங்க் அகர்வால்
இந்த பட்டியலில் தேவ்தத் படிக்கலுக்கு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் மயங்க் அகர்வால் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் இதுவரை 127 போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் ஒரு சதம் 13 அரைசதங்களுடன் 2000 ரன்களை அடித்துள்ளார். மேலும் அவர் நாட்டிற்காக 21 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர். அதனால்தான் ஆர்சிபி அணி அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை பிளேயிங் லெவனில் சேர்க்க அதிக வாய்ப்புள்ளது.
ஸ்வஸ்திக் சிகாரா
இந்தப் பட்டியலில், 20 வயதான ஸ்வஸ்திக் சிகாராவின் பெயரை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிரடிக்கு பெயர் போன ஸ்வஸ்திக் சிகாராவை வீரர்கள் ஏலத்தில் ரூ,30 லட்சத்திற்கு ஆர்சிபி அணி ஏலம் எடுத்துள்ளது. ஸ்வஸ்திக் 2 முதல் தர போட்டிகளில் 74 ரன்களும், 6 லிஸ்ட் ஏ போட்டிகளில் 200 ரன்களும், 4 டி20 போட்டிகளில் 15 ரன்களும் எடுத்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த இளம் வீராருக்கு ஆர்சிபி அணியில் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மனோஜ் பாண்ட்கே
Also Read: LIVE Cricket Score
இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள வீரார் மனோஜ் பாண்ட்கே. இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடிய அணுபவம் கொண்டவர். ஐபிஎல் வீரர்கள் ஏலாத்தில் ஆர்சிபி ஆணி மானோஹ் பாண்ட்கேவை ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அவர் இதுவரை 4 முதல் தர போட்டிகளில் 138 ரன்களையும் 9 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடி, 100 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now