சாம்பியன்ஸ் கோப்பை 2025: மேட் ஹென்றி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடாத பட்சத்தில் அவரின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி காயத்தை சந்தித்தார். இதனால் இறுதிப்போட்டிய்ல் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. ஒருவேளை அவர் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதில் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
நாதன் ஸ்மித்
இந்த பட்டியலில் 26 வயதான ஆல்ரவுண்டர் நாதன் ஸ்மித்தின் பெயர் முதலிடத்தில் உள்ளது. இவர் நியூசிலாந்து அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். மேற்கொண்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் 48 இன்னிங்ஸ்களில் 942 ரன்கள் மற்றும் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர்த்து முதல் தர கிரிக்கெட்டில் 55 போட்டிகளில் 1999 ரன்கள் மற்றும் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேக்கப் டஃபி
இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் 30 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி. மேலும் இவர் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இவரின் ஒருநாள் புள்ளிவிவரங்கள் சிறப்பாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர்த்து முதல் தர கிரிக்கெட்டில், 103 போட்டிகளில் 174 இன்னிங்ஸ்களில் 299 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெவான் கான்வே
இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மூன்றாவது வீரர் டெவான் கான்வே தான். ஒருவேளை நியூசிலாந்து அணி இப்போட்டியில் தங்களது பேட்டிங்கை வலுப்படுத்து முயன்றால் டெவான் கான்வே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 44.71 சராசரியில் 1,431 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து அணி: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், ஜேக்கப் டஃபி, டெவன் கான்வே, மார்க் சாப்மேன், நாதன் ஸ்மித்
Win Big, Make Your Cricket Tales Now