
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்னரே கேஎல் ராகுலை ஒப்பந்தம் செய்வதுடன், அவரை அணியின் புதிய கேப்டனாகவும் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கொண்டு இம்முறை வீரர்கள் ஏலத்தில் சிறப்பாக செயல்படவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவ்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல்லை அந்த அணி நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் கடந்த ஐபிஎல் சீசன் மிகவும் மோசமாக இருந்தது.
அவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி, அதில் 52 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாகவே அவரை அணியில் இருந்து நீக்க ஆர்சிபி அணி முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிளென் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி விடுவிக்கும் எனில் மெகா எலத்தின் போது அவரை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகளிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.