Advertisement
Advertisement
Advertisement

போட்டி முழுவதும் விளையாடி வெற்றிபெற நினைத்தேன் - ஹர்திக் பாண்டியா!

நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, மூன்றாவது போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 22, 2022 • 20:31 PM
3rd T20I: Felt attack is best defence on this wicket, says Hardik Pandya
3rd T20I: Felt attack is best defence on this wicket, says Hardik Pandya (Image Source: Google)
Advertisement

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Trending


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டியும் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லூவிஸ் முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் போட்டி டிரா முடிந்தது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.

இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, மூன்றாவது போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா பேசுகையில், “இந்த போட்டி முழுவது விளையாடி அதன் மூலம் வெற்றி பெற வேண்டும் என்றே நாங்கள் நினைத்தோம், ஆனால் நம்மால் இந்த முடிவை மாற்ற முடியாது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. நியூசிலாந்து அணி பந்துவீச்சு பலம் வாய்ந்தது என்பது எங்களுக்கு தெரியும். இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement