
WI vs AUS, 3rd Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களையும், கேமரூன் க்ரீன் 46 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் காம்பெல் 36 ரன்களையும், ஷாய் ஹோப் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.