
WI vs AUS, 3rd Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களையும், கேமரூன் க்ரீன் 46 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிமுதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பிராண்டன் கிங் 8 ரன்களுடனும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 3 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பிராண்டன் கிங் 14 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 18 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் லூயிஸும் 7 ரனக்ளில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜான் காம்பெல் மற்றும் ஷாய் ஹோப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.