Advertisement
Advertisement
Advertisement

ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 04, 2024 • 08:20 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில்,  இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 04, 2024 • 08:20 PM

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல்-ற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள ஜோஷ் ஹல் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் வாய்ப்பினை பெற்றுள்ளார். 

Trending

அதேசமயம் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த மேத்யூ பாட்ஸ் இப்போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இலங்கை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாடிய மற்ற இங்கிலாந்து வீரர்கள் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் தங்களது இடங்களை உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமில்லாமல் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியானது விளையாடிய முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்: டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், ஜோஷ் ஹல், சோயிப் பஷீர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement