
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் ரியாத்தில் நடத்தப்படும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தொடகக் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரூ.18 கோடிக்கு தக்கவைப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதவிர்த்து ஆல் ரவுண்டர் ரியான் பராக்கை ரூ.14 கோடிக்கும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலை ரூ.11 கோடிக்கும், ஷிம்ரான் ஹெட்மையரை ரூ.11 கோடிக்கும் தக்கவைத்துள்ள அந்த அணி, அன்கேப்ட் வீரராக சந்தீப் சர்மாவை ரூ.4 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. இதனால் எதிர்வரும் மெகா ஏலத்தில் அந்த அணி மிகக்குறைந்த தொகையுடன் பங்கேற்கவுள்ளது.
அதேசமயம் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைக்கவில்லை. இதன் மூலம் வீரர்கள் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்க இருக்கிறார். சர்வதேச அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் ஒப்பந்தம் செய்ய விரும்பும் பல அணிகள் போட்டிப்போடும். மேலும் அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதால் அவருக்கான போட்டி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யக்கூடிய 4 அணிகள் குறித்து இப்பட்டியலில் பார்ப்போம்.