
வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் கடைசியாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையின் போது எம்எஸ் தோனி மற்றும் சில இந்திய வீரர்கள் அடங்கிய பழைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது 2019 உலகக் கோப்பையின் போது லண்டன் நகரில் வலம் வந்த இந்திய வீரர்கள் அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்கள்.
குறிப்பாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பின்புறத்தில் பும்ரா தோளில் கை வைத்துக்கொண்டு நிற்கும் நிலையில் அவர்களுக்கு பின்புறத்தில் மயங் அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இருக்கும் செல்ஃபியை ஹர்திக் பாண்டியா புகைப்படமாக எடுத்து 2019இல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தில் ரிஷப் பந்த் தோள் மீது ஒற்றை கையை வைத்துள்ளது யார் என்பதே ரசிகர்களுக்கு குழப்பமானதாக இருந்து வந்தது.