
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பொர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அனி 474 ரன்களையும், இந்திய அணி 369 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 03ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.