இத்தொடரில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இளம் வீரர்களை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது அஸ்வின் மற்றும் குல்தீப் ஆகியோரது அபாரமான பந்துவீச்சின் மூலம் 145 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இது மிகவும் கடினமான ஒரு தொடராகும், எனவே இதன் வெற்றியாளராக இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இத்தொடரில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன, ஆனால் நாங்கள் அதற்கு தகுந்த பதிலை அளித்துள்ளோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இத்தொடரில் எங்கள் அணியில் இருந்த பெரும்பாலான வீரர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர். அவர்கள் இருக்க வேண்டிய சூழலை நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்க முடியாது, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
துருவ் ஜுரேல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அவர் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் அவரது முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிக்காட்டியிருந்தது. முதல் இன்னிங்சில் அவர் அடித்த 90 ரன்களே எங்களை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் அழைத்துச் சென்றது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவர் ஷுப்மன் கில்லுடன் அமைத்த பாட்னர்ஷிப் எங்களது வெற்றியி\ல் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது.
மேலும் இத்தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாமல் நாங்கள் இதனை சாதித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் அவர்களின் இடத்தை இளம் வீரர்கள் நிரப்புவது என்பது எளிதானது அல்ல. ஆனாலும் இத்தொடரில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அதனை சாதித்துள்ளனர். இப்படியான ஒரு அடியாளத்தை உருவாக்கும் போது அது உங்களது எதிர்காலத்தைல் வலுவானதாக மாற்றும். இது அவர்களுக்கும் மிகப்பெரும் உத்வேகமாகமளிக்கும் என நினைக்கிறேன்.
இத்தொடரில் உள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இது ஒரு மிகச்சிறந்து டெஸ்ட் தொடர். அதனால் நாங்கள் தர்மசாலாவில் நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற விரும்புகிறோம். அப்போட்டியிலும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளர்.
Win Big, Make Your Cricket Tales Now