சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் - துருவ் ஜுரெல்!
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும், அதனையே நானும் இப்போட்டியில் செய்தேன் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று முடிந்துள்ளது. பரபரப்பான இந்த போட்டியில் ஷுப்மன் கில், துருவ் ஜுரெல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியுள்ளது.
அதிலும் இப்போட்டியில் குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜுரெல் முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதைத்தொடர்ந்து இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களத்தில் நிதானமாக செயல்பட்டதுடன் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது துருவ் ஜுரெலுக்கு வழங்கப்பட்டது.
Trending
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுபெற்ற பின் பேசிய துருவ் ஜுரெல், “சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும், அதனையே நானும் இப்போட்டியில் செய்தேன். முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு ரன்கள் தேவைப்பட்டது. எனவே கடைசி வரை பேட்டிங் செய்தால் ரன்களை எங்களால் சேர்க்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். மேலும் அச்சமயம் எங்கள் அணியில் விக்கெட்டுகள் விழத்தொடங்கி இருந்தது. இதனால் நான் கீழ் வரிசை பேட்டர்களுடன் பார்டன்ர்ஷிப் அமைக்க முயன்றேன்.
அவர்களுடன் சேர்ந்த பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தேன். அதற்காக நான் என்னுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்களுக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும். மேலும் ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட்டில் விளையாடுவது சுலபமாக இருந்தது. அதனை பற்றி நானும் ஷுப்மன் கில்லும் விவாதித்து கொண்டு, பத்து பத்து ரன்களாக எங்களை சேஸிங்கை தொடர்ந்தோம். அது எங்களுக்கு உதவியது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now