எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இது அதிக ஆபத்து மற்றும் அதிக வெகுமதி அளிக்கும் ஒரு யுக்தியாகும், ஆனால் நாளின் இறுதியில் எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியிlல் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமடம் மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஷிவம் தூபே மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன்களைச் சேர்த்தார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 13 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என 135 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரைசதம் கடந்துடன், 23 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இது எப்போதும் மைதானத்தில் கொஞ்சம் உள்ளுணர்வாக இருப்பது பற்றியது. யார் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவர்களிடம் பந்தை கொடுங்கள். இந்த வீரர்கள் வலைகளில் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள் - விளையாட்டில் அவர்கள் என்ன வழங்க விரும்புகிறார்களோ அதை தொடர்ந்து பயிற்சி செய்கிறார்கள்.
எனக்கு அவர்கள் தேவைப்படும் போதெல்லாம், அவர்கள் எப்போதும் மைதானத்தில் இருப்பார்கள். இதைத்தான் நாங்கள் அமர்ந்து பேசினோம் - நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம், அதை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இது அதிக ஆபத்து மற்றும் அதிக வெகுமதி அளிக்கும் ஒரு யுக்தியாகும், ஆனால் நாளின் இறுதியில் எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம்.
அணியின் டாப் ஆர்டரில் இருக்கும் ஒருவர் அப்படி பேட்டிங் செய்வதைப் பார்ப்பது நல்லது. அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரது இன்னிங்ஸை ரசித்திருக்க வேண்டும். அது நன்றாக இருந்தது. மேலும் வருண் சக்ரவர்த்தி தனது ஃபீல்டிங்கில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் எங்கள் ஃபீல்டிங் பயிற்சியாளருடன் இடைவிடாமல் கடினமாக உழைத்து வருகிறார்.
அவருக்கு எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை பயிற்சி செய்வதற்காக அதனை பயன்படுத்திக் கொள்கிறார். மேலும் இப்போட்டியில் அவர் தனது கையை உயர்த்தி இன்று நான் வெளிப்புற மைதானத்தில் பீல்டிங் செய்ய விரும்புகிறேன் என்று சொல்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் முடிவுகளைப் பார்த்தீர்கள். அவரது பந்துவீச்சு - அவர் ஒரு செயல்முறை சார்ந்த மனிதர் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். வலைகளில் மிகவும் கடினமாக உழைக்கிறார்.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் எப்போதும் நீங்கள் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள், அதன் பலன்களை நிச்சயம் நீங்கள் பெறலாம். மேலும் நீங்கள் தொடர்ந்து அதனை செய்யும் போது நீங்கள் கூடுதல் ஆற்றலை உருவாக்க முடியும். உங்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் நீங்கள் என்ன செய்திருந்தாலும், அதுதான் நான் கோரும் ஒரு விஷயம். அதனால் எங்கள் அணி வீரர்கள் ஒருபோதும் என்னை ஏமாற்ற மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now