6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் லீக் போட்டியானது இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 56 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 34 ரன்களையும், பனுகா ராஜபக்ஷா 33 ரன்களையும் சேர்த்து உதவினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 187 ரன்களைக் குவித்திருந்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ச் அணியில் ஜேசன் ராய், சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன், கேசி கார்டி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Trending
இருப்பினும் இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வந்த பேரிஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிக்காமல் இருந்த கீரன் பொல்லார்டும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 7 சிக்ஸர்களை விளாசி 52 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் லூசியா கிங்ஸை வீழ்த்தி வெற்றிபற்றது.
Kieron Pollard is awarded @Dream11 MVP! Well done Polly #CPL24 #SLKvTKR #CricketPlayedLouder #BiggestPartyInSport #Dream11 pic.twitter.com/AASf9KO7mC
— CPL T20 (@CPL) September 11, 2024
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றிக்கு கடைசி 11 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த கீரன் பொல்லார்ட் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இந்நிலையில் பொல்லார்ட் சிக்ஸர்களை விளாசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now