
7-members-of-england-cricket-squad-including-3-cricketers-found-covid-positive (Image Source: Google)
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (ஜூலை 8) நடைபெறுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உள்பட,7 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனையின் முடிவில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தொற்று உறுதிசெய்யப்பட்ட அனைவரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதியான வீரர்களின் விவரம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.