Advertisement

SA vs NED, 2nd ODI: நெதர்லாந்தை 189 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement
A clinical bowling performance from South Africa as they restrict Netherlands to 189 !
A clinical bowling performance from South Africa as they restrict Netherlands to 189 ! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 31, 2023 • 08:25 PM

தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. அதன்படி இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 31, 2023 • 08:25 PM

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அவர்களது அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதில் அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ் ஓடவுட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 45 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Trending

அவரைத் தொடர்ந்து 18 ரன்களை எடுத்திருந்த விக்ரம்ஜித் சிங் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முசா அஹ்மதும் 17 ரன்களுக்கும், பரெசி 7 ரன்களிலும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதனைத்தொடர்ந்து ஒருபக்கம், டேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணமே இருந்தது. 

இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேஜா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிசாண்டா மகாலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement