
பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்தது. மேலும் தன் மனைவி மீது தவான் வைத்த குற்றச்சாட்டு அனைத்தையும் டெல்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இரு தரப்பும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஒப்புக்கொண்டதாகவும், அவர்களின் திருமணம் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நீதிபதி ஹரிஷ் குமாரின் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 8, 2020 முதல் இருவரும் கணவன் - மனைவியாக வாழவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஷிகர் தவான் கடந்த 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஸோராவர் என்ற மகன் உள்ளார். இவர்களின் திருமணத்துக்கு முன்பே ஆயிஷாவுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபருடன் திருமணமாகி, அவர்களுக்கு 2 மகள்களும் இருந்தனர்.
அந்த நபருடனான திருமண உறவை முறித்துக்கொண்டு, நிரந்தரமாக இந்தியாவில் தன்னுடன் வசிப்பதாக உறுதி அளித்ததன், பேரில்தான் ஷிகர் தவான் ஆயிஷாவை மணம் முடித்துள்ளார். ஆனால், ஆயிஷா சொன்னபடி நடந்துகொள்ளாமல் முன்னாள் கணவருடன் மீண்டும் நெருக்கமாக இருந்துள்ளார்.