
தென் ஆப்பிரிக்கவின் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி - எம்ஐ கேப்டவுன் அணியை எதிர்கொண்டது.
ஜொஹனன்ஸ்பர்க் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ கேப்டவு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளேசிஸ் அடித்த பந்தை ரஷித் கான் அபாரமான டைவ் மூலம் கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த மகன்யாவும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த லியூஸ் டு ப்ளூய் - மேத்யூ வேட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.