
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அக்ஸர் படேல் நான்கு ஓவர்களில் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதேபோன்று முதல் டி20 போட்டியிலும் அக்ஸர் படேல் நான்கு ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை சாய்த்தார். இதன் மூலம் அக்ஸர் படேல் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் பேட்டிங்களும் 200 விக்கெட்டுகள் பந்து வீச்சிலும் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்று பெருமையை அக்ஸர் படேல் படைத்துள்ளார். இதற்கு முன்பு ஜடேஜா இந்த சாதனையை படைத்திருந்தார். இதன் காரணமாக நேற்றைய போட்டிக்கான ஆட்ட நாயகன் விருது அக்ஸர் படேலுக்கு வழங்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், “நன்றாக பந்து வீசியது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் தற்போது தான் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்தி இருக்கிறேன் என்ற சாதனை எனக்கு தெரியும். ஆனால் சாதனைகளை விட இந்தியாவுக்காக நன்றாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம். கடந்த சில ஆண்டுகளாக நான் எவ்வளவு விக்கெட் எடுத்தேன் என்பதே நான் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.