Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் நடப்பாண்டு போட்டி அட்டவணை வெளியீடு!

இந்திய கிரிக்கெட் அணிக்கு நடப்பாண்டு (2022) டி20 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள் என பல்வேறு சவால் நிறைந்த தொடா்கள் காத்துள்ளன. பிசிசிஐ தரப்பில் இந்திய அணியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
A look at Team India's busy schedule for 2022!
A look at Team India's busy schedule for 2022! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 02, 2022 • 11:31 AM

தற்போது இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் தொடா்களில் தென்னாப்பிரிக்காவுடன் ஆடி வருகிறது. நிகழாண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையே இந்தியாவுக்கு முன்பு உள்ள பெரிய போட்டியாகும்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 02, 2022 • 11:31 AM

நடப்பாண்டு ஜனவரி 3 முதல் 7 வரை வாண்டரா்ஸ் டெஸ்ட், 11 முதல் 15 வரை கேப் டவுனில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் பின் 19, 21, 23-இல் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

Trending

வெஸ்ட் இண்டீஸ் தொடர்  

அதைத் தொடா்ந்து பிப்ரவை 6-இல் அகமதாபாத்தில் முதல் ஒருநாள், 9-இல் ஜெய்ப்பூரில் இரண்டாவது ஒருநாள், 12-இல் கொல்கத்தாவில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களும், 15-இல் கட்டாக்கில் முதல் டி20, 18-இல் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டி20, 20-இல் திருவனந்தபுரத்தில் மூன்றாவது டி20 ஆட்டத்திலும் விளையாடுகிறது. 

இலங்கை தொடர்

அதன் தொடா்ச்சியாக இலங்கையுடன் பிப்ரவரி 25 முதல் மாா்ச் 1 வரை பெங்களுருவில் முதல் டெஸ்ட்டிலும், மாா்ச் 5 முதல் 9 வரை மொஹாலியில் இரண்டாவது டெஸ்டிலும், 13-இல் மொஹாலியில் முதல் டி20, 15-இல் தா்மசாலாவில் இரண்டாவது டி20, 18-இல் லக்னௌவில் மூன்றாவது டி20 ஆட்டத்திலும் மோதுகிறது.

ஏப்ரல்-மே மாதங்களில் ஐபிஎல் தொடா் நடைபெறும் நிலையில் இரண்டு மாதங்கள் சா்வதேச போட்டிகள் எதுவும் இல்லை.

தென் ஆப்பிரிக்கா தொடர் 

ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் முதல் ஒருநாள், 12-இல் பெங்களூருவில் இரண்டாவது ஒருநாள், 14-இல் நாகபுரியில் மூன்றாவது ஒருநாள், 17-இல் ராஜ்கோட்டில் நான்காவது ஒருநாள், 19-இல் டெல்லியில் 5-ஆவது ஒருநாள் ஆட்டங்களில் மோதுகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம்:

ஜூலை 1 முதல் 5-ஆம் தேதி வரை மான்செஸ்டரில் விடுபட்ட டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் ஆடுகிறது. 7-இல் சௌதாம்ப்டனில் முதல் டி20, 9-இல் பா்மிங்ஹாமில் இரண்டாவது டி20, 10-இல் நாட்டிங்ஹாமில் மூன்றாவது டி20இலும், 12-இல் லண்டனில் முதல் ஒருநாள், 14-இல் இரண்டாவது ஒருநாள், 17-இல் மான்செஸ்டரில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களிலும் மோதுகிறது இந்தியா.

 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம், ஆசியக் கோப்பை போட்டிக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபா் 16 முதல் நவம்பா் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் ஆடுகிறது இந்திய அணி. அதன் பின் வங்கதேச சுற்றுப் பயணம் தேதிகளும் முடிவாகவில்லை.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement