
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடரில் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து கடந்த 2 வருடங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே இம்முறை சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்தியாவில் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் கொஞ்சம் சுமாராக செயல்பட்டாலும் பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் புதிய அதிரடி அணுகுமுறையை கிண்டலடித்து படுக்கையில் படுக்க வைக்க இந்திய ரசிகர்கள் காத்திருப்பதாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “இந்தியா காத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டைப் பற்றி நிறைய பேச்சுக்கள் காணப்படுகிறது. அதே போல பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் அணுகுமுறை பற்றியும் நிறைய கருத்துக்கள் இருக்கிறது.