
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல்கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டாமினிக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக அறிமுக வீரர் ஆலிக் அதனெஸ் 47 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதனை எடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த இந்த ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி முடித்திருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த 13வது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார். அத்துடன் அறிமுக டெஸ்ட் போட்டியில் இதுவரை இரண்டு இந்திய துவக்க வீரர்கள் மட்டுமே சதம் விளாசியுள்ளனர்.