-mdl.jpg)
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. நவி மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
பின் 8 ரன்கள் எடுத்திருந்த அலிசா ஹீலி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தஹிலா மெக்ராத் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் 17 ரன்களில் பெத் மூனியும், ரன்கள் ஏதுமின்றி ஆஷ்லே கார்ட்னரும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி - லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.