
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர். முன்னதாக விராட் கோலியும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகினார். இதன் காரணமாக அறிமுக வீரர்கள் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், சௌரவ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ராஜத் பட்டிதார் அல்லது சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான், காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலின் இடத்தில் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் இருவரும் உங்களுடன் அணியில் உள்ளனர். மேலும் விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள்.