
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது நாளான நேற்று பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை தட்டையான ஆடுகளத்தில் 286 ரன்களுக்கு சிறப்பான பந்துவீச்சில் மூலம் நெதர்லாந்து அணி ஆல் அவுட் செய்து அசத்தியது. இதில் பந்துவீச்சில் பாஸ் டி லீட் 4 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து இலக்கை நோக்கி துரத்தும் பொழுது நெதர்லாந்து அணி 120 ரன்கள் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்திருந்து, பின்பு மொத்தமாக சரிந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நெதர்லாந்து பேட்டிங்கில் பாஸ் டி லீட் 68 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக வந்து 52 பந்துகளில் 68 ரன்கள் அடித்த சவுத் ஷகிலுக்கு வழங்கப்பட்டது.
நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீட் கணக்கில் எடுத்துக் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் நெதர்லாந்து தவிர்க்க மற்ற ஒன்பது அணிகளும் உலகக் கோப்பைக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடின. ஆனால் நெதர்லாந்து அணிக்கு அப்படியான வாய்ப்புகள் ஏதும் இல்லை.