
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். மேற்கொண்டு எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.